1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:47 IST)

ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து படுகொலை

திண்டுக்கல் மாவட்ட்ம் கோபால்பெட்டி அருகே ஓடும் பேருந்தில், பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கிராமம் உலுப்பகுடி. இப்பகுதியில் இருந்து, நேற்று மாலையில் ஒரு தனியார்  பேருந்து, திண்டுகல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அந்தப் பேருந்தில், சாணார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 15 க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இப்பேருந்தை விஜய் என்ற ஓட்டுனர் ஓட்டினார். அப்போது, க., பங்களா பேருந்து நிறுத்தத்தில், பேருந்து நின்றபோது, 40 வயதுள்ள பெண் ஒருவர் பேருந்தில் ஏறினார்.

அதேபோல், ஒரு 60 வயதுள்ள முதியவர் தன் மகனுடன் பேருந்தில் ஏறினார்.  இந்த நிலையில், பேருந்தில் ஏறிய முதியவர்,  அப்பெண்ணின் கழுத்தை அறுத்தார். இதில், அப்பெண் சம்பவம் இடத்திலேயே பலியானார்.

இதைப்பார்த்து பயணிகள் பேருந்தில் இருந்து ஓடினர்.  இதுகுறித்து, போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணின் சடலத்தை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.

நிலப்பிரச்சனை காரணமாக இக்கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.