1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (11:06 IST)

எந்த ஆர்பாட்டமும் இல்லாமல், வெட்டி செலவு இல்லாமல் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெற்றி செலவில்லாமல் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு திறந்து வைக்கப்பட்டது. 


 
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நினைவு வளைவு அவரது பிறந்த நாளான இன்று எளிமையாக திறந்து வைக்கப்பட்டது. 
 
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றன. பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், 
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் வளைவு அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் வளைவை திறக்க தடை விதித்தனர். பின்னர், ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஐந்து நிமிட நிகழ்ச்சியாக மெரினாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர். 
 
இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு கட்டுமான பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஆடம்பர விழா எதுவும் இல்லாமல் நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது.