யாருடன் கூட்டணி... ? திடீர் அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்

KAMAL HASAN
Last Modified புதன், 6 பிப்ரவரி 2019 (12:00 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்ததை அடுத்து அவரது கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் கமல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கமல்ஹாசன், 'காங்கிரசுடன் கூட்டணி வைப்பது என்று கூறுவதெல்லாம் தகவல் மட்டுமே, அவர்களும் அழைக்கவில்லை நாங்களும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
 
மேலும் மத்திய பட்ஜெட் குறித்து அவர் கருத்து கூறுகையில், 'அரசு தங்களுக்காக தாங்களே தாக்கல் செய்து கொண்ட ஒரு பட்ஜெட் தான் இடைக்கால பட்ஜெட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம். இந்த பட்ஜெட்டில் இருக்கும் குளறுபடிகளை பொருளாதார நிபுணர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்று குறிப்பிட்டார்
 
இந்நிலையில் வரும் நாடாளுமன்ற  தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று முக்கிய கட்சியாகத் திகழும்   என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 
 
இந்நிலையில் கமல்ஹாசன் பிரபல தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மேலும் தனித்து போட்டியிட எங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. வலிமையும் இருக்கிறது. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மக்கள் நீதி மய்யம் வர வாய்ப்புள்ளதாக கருத்து பரவிவருகிறது. எங்களுக்கு தமிழகம் தான் முக்கியம்...அதனால் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :