வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (15:57 IST)

மனைவியுடன் கள்ளத்தொடர்பு... கடத்தப்பட்ட வாலிபர்.. சேசிங் செய்து காப்பாற்றிய போலீஸ்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் 4 நான்கு பேர் கொண்ட கும்பலால் கடத்திச் சென்றபோது...இளைஞரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜார்ஜ் இரண்டு பேரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரைப்பாக்கத்தை சேர்ந்த ஹைரி என்பவருக்கும்  மதன் என்பவருடைய மனைவி ரேணுகாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது மதனுக்கு தெரிய வர...ஹரியை கடத்தி கொல்ல முடிவு செய்தார் மதன். 
 
இதற்காக தன் கூட்டாளிகளூடன் சேர்ந்து கொண்டு மதன் , ஹரியை கடத்திய போதுதான் காவல் ஆய்வாளர் சினிமா பாணிபோல் விரைந்து , கடத்தலுக்கு பயன்பட்ட வாகனத்தை பின்தொடர்ந்து சென்று ஹரியை காப்பாற்றியுள்ளார். அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரியிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டது.
 
இதனையடுத்து ஹரியைக் கடத்திய  மதன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
 
மேலும் தனி ஒருவராக குற்றவாளிகளை பிடித்த காவல் ஆய்வாளர் ஜார்ஜை காவலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.