1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 ஏப்ரல் 2018 (13:51 IST)

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை

கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி தேவசேனா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரமணி மாரடைப்பால் காலமானார். கணவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தேவசேனா துக்கத்தில் இருந்துள்ளார். நேற்று வீட்டிலிருந்த உறவினர்கள் அனைவரும் தூங்கிய பின், தேவசேனா, வீட்டிலிருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விடிந்ததும் தேவசேனாவை காணாததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எதேர்ச்சையாக வீட்டிலுள்ள கிணற்றில் பார்த்த போது, தேவசேனாவின் உடல் கிணற்றில் மிதந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தேவசேனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவரின் பிரிவைத் தாங்க முடியாததால், தேவசேனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.