1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (06:20 IST)

திமுகவுடன் இணையலாமா? வேண்டாமா? வைகோவின் குழப்பம்

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்து நெகிழ்ந்த வைகோ, திமுகவுடன் நிச்சயம் நெருங்கிவிடுவார் என்றும் வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் வைகோ கூட்டணி அமைப்பார் என்றும் கூறப்பட்டன.



 
 
ஆனால் திடீரென நீட் விஷயத்திற்காக நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வைகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் கலந்து கொள்ளவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் வைத்தால் எப்படி கலந்து கொள்வது என்பதுதான் வைகோவின் கேள்வியாம்
 
இருப்பினும் நீட் விஷயத்தில் அதிமுக அரசு மீது தவறில்லை என்று கூறி வரும் வைகோ, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டால் தர்மசங்கடம் ஏற்படும் என்ற காரணமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நீட் தேர்வு விஷயத்தில் நளினி சிதம்பரத்தின் கடைசி நேர வாதம் தான் வழக்கின் போக்கை மாற்றியது. இதை வைகோ அனைத்து கட்சி கூட்டத்தில் கூறினால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கவே வைகோ இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கலா? வேண்டாமா? என்பதில் வைகோ குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது.