செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாவது ஏன்...?

senthil balaji
Last Modified வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:52 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமமுக என்ற  டிடிவி தினகரன் கட்சியிலிருந்து விலகி இன்று திமுகவில் இணைகிறார் என்ற செய்தி வைரலைவிட வேகமாக பரவியது நேற்று. அதற்கான ஆயத்தமாகவே செந்தில் பாலாஜியின் கார்களில் உள்ள ஜெயலலிதாவின் படம் , டிடிவி தினகரன் படங்கள் கடந்த சில நாட்களாகவே அகற்றும் பணிகளில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். 
இது குறித்து நேற்று தன் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்  சிறு இலை விழுந்ததற்கு ஆல மரமே சாரிந்தது என்று அர்த்தமல்ல என்றும்,நெல்மணிகளோடு களைகளும் சேர்ந்து விடுவது நிலத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் தான் என்றும்,ஒரு சிறு குழுவிலகிச் செல்வதால் கட்சியே முடங்கி விடாது. முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் யார் வருந்தப்போகிறார்கள். முரணான எண்ணம் கொண்டவர்கள் விலகி நிற்பது நலமே என செந்தில் பாலாஜியின் பெயரைக்குறிப்பிடாமல் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில் இன்று தன் கரூர் மாவட்ட ஆதரவாளர்களுடன் தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றுள்ளார்.
 
இன்று அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள் கோஷம் முழங்கி திமுகவின் பலத்தை பெருக்கப் போவதாக கூறிவருகின்றனர்.
 
செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது அவரது சொந்த த காரணம் என்றாலும் அரசியலில் நிறைய தடவை அவர் கட்சி தாவி இருக்கிறார் என்றும் அவர் மீது விமர்சனம் முன் வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்


இதில் மேலும் படிக்கவும் :