புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (19:29 IST)

கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை? எடப்பாடி பழனிசாமி

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இதில் இருந்து திமுக - பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று கூறியுள்ளார்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் 90% பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்றும் மீதமுள்ள 10 சதவீத பணிகளை மூன்று ஆண்டுகளாக திமுக அரசு நிறைவேற்றாமல் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணியை திமுக நிறைவேற்றுவதாக கூறி வருகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கவர்னர் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கதாக கூறிவிட்டு முதலமைச்சர் பங்கேற்றது வேடிக்கையாக இருக்கிறது என்றும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்போம் என்று ஆர்எஸ் பாரதி கூறிய நிலையில், கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்பதாக அறிவித்ததும் திமுக நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் இதிலிருந்து திமுக பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்த போது பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்

Edited by Siva