திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (17:17 IST)

விஜய் மாநாட்டை பார்த்து பயப்படுவது ஏன்.? திமுகவுக்கு எல்.முருகன் கேள்வி..!!

L Murugan
விஜய் மாநாடு நடத்துவதை பார்த்து திமுக அரசு பயப்படுவது ஏன்?  என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.   
 
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பகுதியில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், தமிழகத்தில் ஆன்மீகம் பேசினால் கைது செய்யப்பட வேண்டும் என்பது  திமுக அரசின் தவறான செயலாக இருக்கிறது என்றார். அவர் கைது செய்யப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எல்.முருகன் தெரிவித்தார்
 
முதல்வர் மு.க ஸ்டாலினின் வெளிநாடு பயணத்தால் தமிழகத்திற்கு எந்த ஒரு முதலீடும் வரப்போவதில்லை என்று அவர் விமர்சித்தார்.

 
மேலும் மாநாடு நடத்துவது அரசியல் கட்சிகளின் உரிமை என தெரிவித்த எல்.முருகன் விஜய் மாநாடு நடத்துவதை பார்த்து திமுக அரசு பயப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.