முத்துராமலிங்க தேவர் பேனர்களை அகற்றாதது ஏன்?
சென்னை, நந்தனத்தில் தேவர் ஜெயந்தியை ஒட்டி முத்துராமலிங்க தேவர் பேனர்களை அகற்றாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, நந்தனத்தில், தேவர் ஜெயந்தியை ஒட்டி, ஏராளமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவை அகற்றப்படவில்லை. இது குறித்து, சமூக ஆர்வலர், ‘டிராபிக்’ ராமசாமி மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, இந்த விஷயத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது குறித்து கவலை தெரிவித்தது.
மேலும், சட்டத்தை மீறி செயல்படுவதையே மக்கள் குறிக்கோளாக வைத்துள்ளனர். டிஜிட்டல் பேனர் களை இன்னும் அகற்றாதது குறித்து பதில் மனுதாக்கல் செய்ய, சென்னை மாநகராட்சி மற்றும்போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.