சசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னிய போட்டோ: சத்தியமா நான் லீக் பண்ணலை!
சசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னிய போட்டோ: சத்தியமா நான் லீக் பண்ணலை!
சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவின் நெருக்கமான புகைப்படங்கள் பொங்கல், தீபாவளிக்கு திரைப்படங்கள் வருவது போல் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. அரசியல் அரங்கில் இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த புகைப்படங்களில் அவர்கள் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போலவே உள்ளன. இந்நிலையில் முன்னதாக வெளியான அந்த புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என சசிகலா புஷ்பா தனது கணவருடன் அதேப்போல இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
ஆனால் தற்போது புதிதாத நான்கு புகைப்படங்கள் திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பது போல் வெளியாகின. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் திருச்சி சிவா சசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னுவது போன்ற புகைப்படங்களும் உள்ளன.
இதனால் சசிகலா புஷ்பா தரப்பு மிகவும் அப்செட் ஆகிவிட்டதாகவும், இந்த புகைப்படங்களை லீக் செய்வது சிவா தரப்பு தான் என அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக பேசப்படுகிறது.
ஆனால் சிவா தரப்போ தான் போட்டோவை லீக் செய்யவில்லை என அடித்துக்கூறுவதாகவும், சசிகலா புஷ்பாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிவா தரப்பு ஈடுபட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.