வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (14:46 IST)

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.! ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்..!!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை ஜூலை 26-ம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
பெண் காவலரை அவதூறாக பேசியதாகவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாகவும் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அதனை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்,  சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.


இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஏற்கெனவே தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று பட்டியலிடப்படாத நிலையில் சவுக்கு சங்கர் சார்பில் மீண்டும் முறையிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை வரும் 26 ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.