புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (15:55 IST)

தமிழகத்தில் ’டாஸ்மாக் கடை’ எப்போது திறக்கப்படும் ? ’குடி’மகன்கள் எதிர்பார்ப்பு !

தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இன்று காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அசாம் மற்றும் மேகலயாவில் குறைவான நேரத்திற்கு மட்டும் மதுக்கடையில் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள்  திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

எனவே, தமிழகத்தில் ஏப்., 30 ஆம் தேதிக்கு பிறகு மதுக்கடைகள் எப்போது திறக்கப்படுமென்பது குறித்து அரசு அறிவிக்கும் என தெரிகிறது.

அதனால் மதுக்கடைகள் எப்பொழுது திறக்கப்படும் என ’குடி’மகன்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.