சினிமா படப்பிடிப்புக்கு எப்போது அனுமதி?

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 22 மே 2020 (16:09 IST)
தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தருவது பற்றி விரைவில் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சின்னத்திரை, பெரியத்திரை படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு ரத்தால் பல தொலைக்காட்சிகள் பழைய தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வந்தன. 
 
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சினிமா சூட்டிங்கிற்கும் அனுமதி அளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. 
 
இதற்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அவர் கூறியதாவது, தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தருவது பற்றி விரைவில் முதல்வர் ஆலோசனை நடத்துவார். கொரோனா பாதிப்பு சூழல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ஆலோசித்து முடிவு செய்யப்படும். 
 
இதேபோல திரையரங்குகளுக்கு அனுமதி தருவது பற்றியும் உரிய நேரத்தில் முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :