ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (18:24 IST)

ஹிந்தி மொழியாக இருந்தாலும் வேறு எந்த மொழியாக இருந்தாலும் கட்டாயமாக திணிப்பதை எதிர்ப்போம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர மலைக்கோட்டை பகுதி 13,13a ,சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு தெருமுனை கூட்டம் ,வடக்கு ஆண்டார் வீதியில் நடைபெற்றது.
 
இந் நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 
திமுக செய்தி தொடர்பாளரும், இணைச் செயலாளரருமான தமிழன் பிரசன்னா, மாநகரச் செயலாளரும் மண்டல தலைவருமான மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..... 
 
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இடையில் தேர்தல் வந்ததால் தடைப்பட்டிருந்த தெருமுனை கூட்டத்தை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
 
குற்றவியல் தண்டனை சாட்சிய சட்டங்களை திருத்துவதாக கூறி குறிப்பிட்ட மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
 
ஹிந்தி மொழியாக இருந்தாலும் வேறு எந்த மொழியாக இருந்தாலும் கட்டாயமாக திணிப்பதை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார்.