வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (18:00 IST)

கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம்-ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

omni bus chennai
சமீபத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக கிளாம்பாக்கம் பேருந்து  நிலையம் கட்டப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த  நிலையில், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கே சென்று வரும் நிலையில், சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் நுழைய அனுமதியில்லை என்று  அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, போக்குவரத்து ஆணையம், இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி  பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும், சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது.,, இசிஆர் சாலை மார்க்கம் நீங்களாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த  நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் உத்தரவை மீறி ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் நுழைந்தால் நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.