ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 மே 2019 (16:22 IST)

12 - 5 ஏசி கட்: மெட்ரோ வரை பாய்ந்த தண்ணீர் பிரச்சனை!

கோடையால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக மெட்ரோ ரயிலில் மதிய வேளையில் ஏசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 
 
கடந்த சில வாரங்களாகவே சென்னையை கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், சென்னைக்கு தண்ணீர் ஆதாரங்களாக விலங்கும் முக்கிய ஏரிகளிலும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. 
 
எனவே, தண்னீர் பிரச்சனையை சமாளிக்க சென்னை மொட்ரோ நிர்வாகம் மக்கள் கூட்டம் அதிகமில்லாத மதிய வேலையில் ஏசியை நிறுத்தி வைத்திருந்துள்ளது. கணக்கின்படி ஒரு நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையம் இயங்க நாள் ஒன்றுக்கு 9,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. 
 
அதில் 7,000 லிட்டர் ஏசியை இயங்க வைக்க மட்டுமே செலவாகிறதாம். எனவே மதியம் 12 - 5 வரை ஏசியை நிறுத்தி வைப்பதால் குறைந்தது 30% தண்ணீரை சேமிக்க முடிகிறது என மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் இந்த நேரத்தில் நடைமேடைக்கு வரும் பயணிகள் காற்றில்லாம அவதிப்படுவதை தடுக்க வேரு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளதாம்.