1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (22:22 IST)

சசிகலா முடிவால் அதிமுகவை நோக்கி செல்வார்களா அமமுகவினர்?

அரசியலை விட்டு விலகுகிறேன் என சற்றுமுன் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளதால் அமமுகவில் உள்ள பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவை நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
வரும் தேர்தலில் அதிமுக எந்த காரணத்தை முன்னிட்டும் தோல்வியடைந்து கூடாது என்றும் அதேபோல் திமுக வெற்றி அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே சசிகலா இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து தினகரனின் அமமுகவில் உள்ள பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் சாரை சாரையாக அதிமுகப் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சசிகலாவின் ஆட்டம் வேறுவிதமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்