நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு: விவேக் மருத்துவமனையில் அனுமதி !
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் தமிழகத்தில் தினமும் சுமார் 7,000 பேர் பேர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு திரையுலக பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தடுப்பூசி ஒன்றுதான் மக்கள் உயிரை பாதுகாக்கும் என்றும் பொருள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதே சிறந்த தடுப்பு நடவடிக்கை என்றும், எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு முகக்கவசம் அணியுங்கள் என்றும் கூறியுள்ளார்.
நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.