திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (10:29 IST)

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை! – விழுப்புரத்தில் அதிர்ச்சி!

விழுப்புரத்தில் சொந்த மகளை தந்தையே வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி கோவிந்தன். இவரது மனைவி சில ஆண்டுகள் முன்னதாக இறந்துவிட்ட நிலையில் கோவிந்தன் தன் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். 17 வயதான அந்த சிறுமி 10ம் வகுப்பு முடித்த பிறகு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி திருமணமாகாமலே கர்ப்பமாக இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுமியிடம் அதுகுறித்து விசாரித்துள்ளனர். அதில் தனது தந்தை கோவிந்தனும், அவரது நண்பரான முனுசாமி என்பவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதில் சிறுமி கர்ப்பமானதும் தெரிய வந்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீஸார் கோவிந்தனையும், முனுசாமியையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.