1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (11:31 IST)

தக்காளி விலை அதிகரிப்பு எதிரொலி: பவுடராக்கி விற்பனை செய்ய முடிவு..! வணிகர் சங்க தலைவர் தகவல்

தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில் தக்காளி விலை குறைவாக இருக்கும் போது அதனை பவுடர் ஆக்கி, விலை அதிகமாக இருக்கும் போது விற்பனை செய்யலாம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
 
 தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை செய்ய அரசு முன் வந்தால் அதனை விற்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தக்காளி விலை குறைவாக இருக்கும்போது அவற்றை அரசு கொள்முதல் செய்து பவுடர் ஆக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது அதனை குறைந்த விலையில் விற்பனை செய்தால் தக்காளி விலையை கட்டுப்படுத்தி விடலாம் என்றும் இதனை விற்பனை செய்ய வணிகர்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரம் ராஜா தெரிவித்துள்ளார் 
 
மேலும் வேளாண் பொருட்களுக்கு சுங்கவரி ரத்து செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் தக்காளி உள்ளிட்ட காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran