வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 டிசம்பர் 2017 (17:03 IST)

சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த் - வெளியான புகைப்படம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


 
உடல் நலக்குறைப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருக்கிறார். நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட தொலைக்காட்சி பேட்டிகளின் போது கூட கோர்வையாக பேச முடியாமல் அவர் திணறுகிறார்.
 
அந்நிலையில், கடந்த 28ம் தேதி விமானம் மூலம், சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார். வழக்கமாக வேட்டி, சட்டையில் செல்லும் விஜயகாந்த் இந்த முறை ஜீன்ஸ் பேண்ட், சர்ட், கூலிங் கிளாஸ் அணிந்து காட்சியளித்தார்.
 
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியருடன் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.