செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:41 IST)

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்தி: பிரேலதா விளக்கம்!

vijayakanth
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்து கடந்த சில மணி நேரங்களாக திடீரென சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த வதந்தி குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கமளித்துள்ளார். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து சற்று முன் திடீரென இணைய தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன
 
இதனை அடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தபோது விஜயகாந்த் நன்றாக இருக்கிறார் என்றும் அவருடைய உடல்நிலை பற்றி தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தனது பிறந்தநாளை முன்னிட்டு நாளை தலைமைக் கழகத்திற்கு விஜயகாந்த் வருகிறார் என்றும் அவரை சந்திக்க தொண்டர்கள் தாராளமாக வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்