1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 மார்ச் 2018 (12:17 IST)

அணி மாறும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ? - மிரட்டும் அமைச்சர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியின் அ.தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் திருமதி கீதா மணிவண்ணன், இவரது கணவர் மணிவண்ணன், நெரூர் வடபாகம் ஊராட்சியின் தலைவராக இருந்தவர் ஆவார். 

 
அந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து வரும், இவரை ஒரு சில கட்சி நிகழ்ச்சிகளில் புறக்கணித்து வருகிறார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 
 
கீதா மணிவண்ணன் அவர்களின் ஆதரவாளர்களோ, நம்மை மதிக்காத இடத்தில் இருக்க வேண்டாம் என்றும், டி,டி.வி அணிக்கு மாற வேண்டுமென்றும், பலமுறை கோரிக்கை வைத்ததோடு, விஜயபாஸ்கரை புறக்கணிக்கும் விதமாக, வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் டி.டி.வி தினகரன் அணிக்கு மாற இருப்பதாக கூறி பதிவிட்டு வந்தனர். 
 
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில், ஒரு தொகுதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் அரவக்குறிச்சி தொகுதி மீதமுள்ள மூன்று தொகுதிகளில் ஒன்று குளித்தலை தொகுதி தி.மு.க வசம் உள்ள நிலையில், இவர் மட்டும் தான் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வாக உள்ளார். ஆகவே, இவரும் சென்று விட்டால், தனது (எம்.ஆர்.விஜயபாஸ்கர்) அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்றும், அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கீதா மணிவண்ணன் தொடர்பாக ஏதாவது ரகசியம் கிட்டுகின்றதா  என்று எதிர்பார்த்தார். 

 
அதாவது அவரது கணவர் பணியாற்றி வந்த நெரூர் வடபாகம் பகுதியின் பஞ்சாயத்து செயலாளர் ரமேஷை தாக்கியதாகவும், அதனால் அவர் (எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் கணவர்) மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரை உள்ளூர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரே தூண்டி விட்டு வருவதாக, எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
கீதா மணிவண்ணன் மீது வீண் பழி சுமத்துவதற்காகவும், அவரது கணவர் மணிவண்ணன் மீது திட்டமிட்டே இந்த புகார் தெரிவிக்கப்பட்டதோடு, ஊடகங்களில் பெரிதாக்கி, அதன் மூலம் தனது அணியிலிருந்து டி.டி.வி அணிக்கு செல்லாமல் இருக்கத்தான் இந்த ராஜ தந்திரம் என்கின்றனர் உண்மையான அ.தி.மு.க வினர்.

- சி. ஆனந்தகுமார்