விஜயபாஸ்கர் மகள், மனைவிக்கு கொரோனா; ரெய்டில் திருப்பம்! – வழக்கறிஞர் தகவல்!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்து வரும் நிலையில் அவரது மகள் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமானவரித்துறையினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் பிள்ளைகள் பேரிலும் அதிக சொத்து வாங்கியதாக அவரது மனைவி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் பாபுமுருகவேல் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கர் மனைவி மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு உள்ள நிலையில் அவருக்கு கொரோனா என்று வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.