செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (13:05 IST)

கட்சிக் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்.! பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு.!!

பரபரப்பான அரசியல் சூழலில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது கட்சி கொடியை நாளை அறிமுகம் செய்கிறார். 
 
திரை உலகில் கொடி கட்டி பறக்கும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார். முதல் மாநாட்டுக்குத் தயாராகி வரும் அவர் அதற்கு முன்பாக, நாளை கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். 

சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு மேல் இந்நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. காலை 11 மணிக்குள்ளாக  கட்சியின் கொடியை ஏற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கொடி அறிமுக விழாவில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நீலாங்கரை இல்லத்திலிருந்து  பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையொட்டி பாதுகாப்பு வழங்க கோரி நீலாங்கரை காவல் நிலையத்திலும், கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும் கட்சி அலுவலகத்திற்கும் பாதுகாப்பு கேட்டு கானத்தூர் காவல் நிலையத்திலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 
செப்டம்பர் இறுதியில் விக்கிரவாண்டியில் மாநாடு நடக்கவுள்ளதாகவும் அதற்குள் கொடியை தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.