புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (07:35 IST)

கனவுகளுடன் வந்தார், கனவு நனவானதும் கிளம்பிவிட்டார்: தந்தை குறித்து விஜய்வசந்த்

எனது தந்தை 50 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு கனவுகளுடன் வந்தார். தற்போது கனவுகள் அனைத்தும் நனவாகியவுடன் மீண்டும் சொந்த ஊருக்கு வந்துவிட்டார் என தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி எம்பியுமான வசந்தகுமார் அவர்களின் மகனும் நடிகருமான விஜயவசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உருக்கமாக தெரிவித்துள்ளார் 
 
கன்னியாகுமரி தொகுதி எம்பியும் தொழிலதிபரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான வசந்தகுமார் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். அவருடைய உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும் வசந்தகுமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வசந்தகுமார் அவர்களின் மகனான விஜய் வசந்த் தனது டுவிட்டரில் கூறியதாவது: 1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.