1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (20:33 IST)

நிர்மலா சீதாராமனுக்கு கன்னியாகுமரி எம்பியின் வேண்டுகோள்!

கடந்த சில நாட்களாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மூடப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது
 
55 ஆண்டுகளுக்கும் மேலாக 1500 கிளைகளுடன் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மூடுவது என்பது சரியான நடவடிக்கை அல்ல என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
 
கடந்த 55 ஆண்டுகளாக 1500 கிளைகளுடன் தமிழகத்தில் இயங்கி, தமிழக மக்கள் பல உதவிகள் பெற்று வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மூடுவதற்காக மத்திய அரசு எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்