திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 9 டிசம்பர் 2023 (19:33 IST)

4 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது: விஜய் வசந்த் எம்பி

Vijay Vasanth
சமீபத்தில் முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகள்  நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பாதிக்காது என்று விஜய் வசந்த் எம்பி தெரிவித்துள்ளார்

சென்னை வெள்ளம் குறித்த நிவாரண பணிகளை பார்வையிட வந்த விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது ’சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் இந்த சமயத்தில் அனைவரும் காலத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் 4 மாநில தேர்தல் முடிவுகள் 2024 ஆம் ஆண்டு தேர்தலை பாதிக்காது என்றும் இந்தியா கூட்டணி மீண்டும் இணைந்து வந்து மக்களாட்சியை தரும் என்றும் தெரிவித்தார்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா விவகாரத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜகவினர் நசக்கி உள்ளார்கள் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்தார்

Edited by Siva