புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (15:30 IST)

விஜய் வசந்த் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கைது

போராட்டத்தில் ஈடுப்பட்ட குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  உட்பட 400க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது. 

 
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் போராட்டம் 300 நாட்களை கடந்த நிலையில் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடங்கியது நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 
 
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட 400க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.