1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2023 (16:12 IST)

அன்புமணிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விஜய்.. புதிய கூட்டணியா?

vijay
பாமக தலைவர் அன்புமணிக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக விஜய், தமிழக அரசியலில் கூர்ந்து கவனித்து வருகிறார் என்பதும்  தமிழகத்தில் உள்ள  அரசியல் பிரபலங்களின் சிலைகளுக்கு தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாலை மரியாதை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் அவ்வப்போது அவர் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை அழைத்து நான் ஆலோசனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி பல சமூக நல திட்டங்களையும் அவர் செயல்படுத்தி வருகிறார். இதனை அடுத்து அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் அரசியலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடுவாரா அல்லது சில கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறாத விஜய் முதல் முறையாக பாமக தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதை பார்க்கும்போது  அந்த அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்யின் திட்டம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva