1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (15:54 IST)

படிக்கட்டில் பயணித்த மாணவனை உள்ளே அழைத்த ஓட்டுநர் - மிரட்டிய மாணவன்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையின் சார்பில் பள்ளி நேரத்திற்கு செங்கம் பகுதியில் இருந்து பள்ளிப்பட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்காக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது
 
செங்கத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதி வரையில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்
 
காலியாக பேருந்து சென்றாலும் பேருந்துக்குள் சென்று அமர்ந்து செல்லாமல் பேருந்தின் படியில் நின்று ஒரு காலை கீழே தேய்த்தபடி கூச்சலிட்டு கும்மாளமடித்து மாணவர்கள் செல்வதால் பேருந்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் ஓட்டுநர் நடத்துனருக்கும் விபத்து ஏற்பட்டு விடுமோ என  அச்சம் ஏற்பட்டு வரும் நிலையில்
 
ஆபத்தை அறியாமல் படியில் நின்றபடி பயணம் செய்த மாணவனை ஓட்டுனரும் நடத்துனரும் பேருந்திற்குள் வரும்படி அழைத்ததால் ஆத்திரமடைந்த மாணவன் கேவலமான வார்த்தைகளால் ஒருமையில் பேசியும் ஓட்டுநர் நடத்துனரையும் மிரட்டும் தோணியிலும்  நடந்து கொண்டது பேருந்தில் பயணம் செய்பவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து வலைதளங்களில் மூலம் தற்போது இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது
 
கட்டுக்கு அடங்காத பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பலவிதமான பிரச்சனைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது செங்கம் காவல் நிலையத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து ஓட்டுடன் நடத்துனர் மாணவர்கள் மீது புகார் அளித்த படி உள்ளனர் ஆனால் எவ்வித பயனும் இல்லை மாணவர்களின் பெற்றோர் இடம் வீட்டுக்கே சென்று மாணவர்களின் நடத்தை குறித்தி சொல்லியும் எவ்வித பயனும் இல்லை 
 
யாருக்கும் அடங்காத மாணவர்கள் தற்போது ரவுடிகள் போல் நடந்து கொள்வதும் ஓட்டுநர் நடத்தினவர்களை மிரட்டுவதும் மாணவர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொண்டு படிப்பு பற்றியும் விபத்தை பற்றியும் அக்கறை கொள்ளாமல் தான் போன போக்கில் செல்லும் மாணவர்களை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறையும் காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்