1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (08:59 IST)

சுங்கச்சாவடி உடைப்பு - தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை வேல்முருகன் நேரில் சென்று நேற்று ஆறுதல் தெரிவித்தார். 144 தடை அமலில் இருக்கும்போது வேல்முருகன் மக்களை சந்தித்து பேசியதற்காக கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வேல்முருகனை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.