1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (09:08 IST)

தொடர் மழை எதிரொலி: 2 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

மழை முதல் கனமழை பெய்து வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய ஒரு சில நாட்கள் மட்டும் மழை இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் இன்று முதல் கனமழை பெய்யும் என அறிவித்திருந்தது
 
இந்த அறிவிப்பின்படி இன்று அதிகாலை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் 
 
ஏற்கனவே கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தீபாவளி விடுமுறையாக இருந்த நிலையில் இந்த இரு மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் இன்று மேலும் ஒரு நாள் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது