1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (15:07 IST)

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! இரண்டு மாவட்டங்கள் அறிவிப்பு

holiday
தென்கிழக்கு வங்க கடலில் மாண்டாஸ் என்ற புயல் தோன்றி உள்ளதை அடுத்து இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று மதியம் முதல் நாளை வரை வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சற்றுமுன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன் காரணமாக மேலும் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva