வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: நாகப்பட்டினம் , திங்கள், 8 ஜூலை 2024 (14:14 IST)

வேளாங்கண்ணி உத்திரிய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆலயம் அமைந்துள்ளது.
 
கீழ்த்திசை நாடுகளில் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற இந்த பேராலயத்தில் மும்பை, வசாய் பகுதி கொங்கினி மீனவர்களால்  கொண்டாடப்படும் உத்திரிய மாதா ஆண்டுப்பெருவிழா அதி விமர்சையாக தொடங்கியது.
 
வேளாங்கண்ணி பேராலய ஆலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்புத் திருப்பலி செய்தார். 
 
தொடர்ந்து பேராலய வளாகத்திலிருந்து துவங்கிய கொடி ஊர்வலம் கடற்கரை சாலை வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.
 
அதனைத் தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார். வான வேடிக்கைகள் முழங்க மாதா உருவம் பொறித்த புனித கொடி பேராலய கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
 
விழாவில் மும்பை வசாய் பகுதி கொங்கனி மீனவர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
 
முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வரும்15ஆம் தேதி நடைபெறுகிறது.