வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (15:32 IST)

விஜய்க்கு கூறிய அறிவுரை ரஜினிக்கும் பொருந்து: வன்னி அரசு

விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் கூறிய அறிவுரை ரஜினிக்கும் பொருந்தும் என விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வன்னி அரசு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ்ராய் காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வரி என்பது நன்கொடை போன்றது அல்ல என்றும் அது ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு என்றும் சினிமாவில் ஹீரோவாக இருப்பது மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு அறிவுரை கூறியது 
 
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வன்னிஅரசு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து கூறியபோது, சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுரை விஜய்க்கு மட்டுமின்றி ரஜினி உள்பட அனைத்து திரை உலக பிரமுகர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுரை நடிகர் விஜய் அவர்களுக்கு மட்டுமல்ல; நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அத்தனை திரை உலகத்தை சேர்ந்தவர்களுக்கும் தான்.#ரீல்ஹீரோ என தெரிவித்துள்ளார்.