செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 நவம்பர் 2018 (08:13 IST)

ஆந்திர முதல்வருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: காரணம் என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த சில மாதங்களாகவே முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேற்று திருமாவளவன் சந்தித்து பேசினார். விஜயவாடாவில் உள்ள தலைமைசெயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து அக்கட்சி சார்பில் வெளியான அறிக்கை ஒன்றில் 'விஜயவாடாவில் உள்ள தலைமைசெயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வருகிற டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்குமாறு திருமாவளவன் அழைப்பு விடுத்தாக கூறப்பட்டுள்ளது.  மாநாட்டில் பங்கேற்பது குறித்து விரைவில் தகவல் அளிப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.