செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (13:32 IST)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீர் உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதுவரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் ரூ.115 என்று இருந்த நிலையில் இன்று முதல் ரூபாய் 200 என அதிகரிக்கப்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நுழைவு கட்டணம் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ஐந்து வயது முதல் 12 வயது வரை,  12 வயது வரை  17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுக்கும் அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணம் வசூலிக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
பூங்காவில் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால் பூங்கா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran