திரு.விஜய் ... ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்!
பாஜகவின் மூத்த உறுப்பினர் வானதி சீனிவாசன் விஜய்யை வெகுவாக பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் தளபதி விஜய்க்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை விடுத்தார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சேலஞ்சை தளபதி விஜய் ஏற்று நிறைவேற்றி உள்ளார்.
தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடிகளை நட்டு, இதுகுறித்த குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அவரே மண்வெட்டியால் குழி தோண்டி செடிகளை நட்ட இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் மகேஷ் பாபு தனது நன்றியை தெரிவித்துள்ள தளபதி விஜய் கிரீன் இந்தியா சேலஞ்சை அனைவரும் நிறைவேற்றினால் அனைவருக்கும் நல்லது என்றும், அனைவருக்கும் சுகாதாரமானது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் பாஜகவின் மூத்த உறுப்பினர் வானதி சீனிவாசன் விஜய்யை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளதாவது, இளைய தலைமுறைக்கு பசுமையைப்பற்றி கூற விழையும் நடிகர்கள் திரு விஜய் மற்றும் திரு மகேஷ் பாபு இருவருக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு பாஜகவிற்கும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் வானதி சீனிவாசன் தாமாக முன்வந்து பாராட்டி இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.