செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 மே 2021 (19:56 IST)

மத்திய அரசின் அனுமதியின்றி தடுப்பூசி ஏற்றும்தி இல்லை: உலகளாவிய டெண்டர் என்னாவாகும்?

மத்திய அரசின் ஒப்புதல் இன்றி மாநில அரசுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முடியாது என உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் தடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் விடப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன 
 
இந்த நிலையில் ஏற்கனவே பஞ்சாப் மாநில அரசு உலகளாவிய தடுப்பூசி டெண்டர் விடுத்திருக்கும் நிலையில் பஞ்சாப் மாநிலத்திற்கு பதிலளித்துள்ள உலகின் முன்னணி தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பஞ்சாப் மாநிலத்திற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முடியாது என்றும் மத்திய அரசின் ஒப்புதலோடு மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு தடுப்பூசி ஏற்றுமதி கிடைக்குமா என்பது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.