திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (12:17 IST)

கருணாநிதி, ஜெயலலிதா மறைவில் ஒரு ஒற்றுமை : என்ன தெரியுமா?

மறைந்த முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகிய இருவரின் மரணத்திலும் ஒரு ஒற்றுமை நிகழ்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அதேபோல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பவர் மாதம் 12ம் தேதி மரணமடைந்தார். 
 
இதில்தான் ஒரு ஒற்றுமை இருப்பதாக கூறுகிறார்கள். அதாவது ஜெயலலிதா இறந்தது 05-12-2016. இந்த எண்களை கூட்டினால் 2033 வருகிறது. அதேபோல், கருணாநிதி மரணடைந்தது 07-08-2018 இதைக்கூட்டினாலும் கூட்டு எண்ணிக்கை 2033 வருகிறது.
 
இது தற்செயலாக நிகழ்ந்தாலும், இந்த ஒற்றுமையை சிலர் சிலாகித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.