புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (11:49 IST)

திருமணத்துக்கு மறுத்த அக்கா மகளை கத்தியால் குத்திய மாமன்!

திருமணத்துக்கு மறுத்த அக்கா மகளை கத்தியால் குத்திய மாமன்!

திருச்சி அருகே திருமணம் செய்ய மறுத்ததால் தனது சொந்த அக்கா மகளை மாமன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே உள்ள கருங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலத்தின் மகள் 19 வயதான யோகலட்சுமி. அவரை பெண் கேட்டு பச்சூரை சேர்ந்த அவரது தாய் வழி மாமன் 26 வயதான வீரப்பிள்ளை வந்துள்ளார்.
 
வீரப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதே நேரம் பல ஆண்டுகளாக எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார். இதனால் மகள் படித்து வருவதை காரணம் காட்டி யோகலட்சுமியின் தந்தை இந்த திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.
 
ஆனாலும் வீரப்பிள்ளை யோகலட்சுமையை திருமணம் செய்து வைக்க அக்கா குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இதனால் கோபமடைந்த யோகலட்சுமியின் தந்தை வெங்கடாச்சலம் ஒரு குடிகாரனுக்கு எனது மகளை திருமணம் செய்து தர முடியாது என கூறினார்.
 
இதனால் ஆத்திரமடைந்த வீரப்பிள்ளை நன்றாக குடித்துவிட்டு யோகலட்சுமியின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது தனது கையில் இருந்த கத்தியை வைத்து சரமாரியாக யோகலட்சுமியை தாக்கிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.
 
இதனையடுத்து படுகாயமடைந்த யோகலட்சுமியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் வீரப்பிள்ளை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.