திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (19:39 IST)

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வான எம்.எல்.ஏ மனைவி!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த தேர்தலில் போட்டியிட நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது என்பதும் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதி நகர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணனின் மனைவி கயல்விழி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.