வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (11:06 IST)

கூவி கூவி ஆள் சேர்க்கும் உதயநிதி ஸ்டாலின்: வந்து குவியுமா இளைஞர் கூட்டம்??

திமுக இளைஞர் அணியின் இளைஞர்கள் வந்த சேருவதற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளைஞர் அணி நிர்வாகிகளில் மாற்றம் ஏதுமில்லை, நேர்காணல் மட்டுமே நடந்துள்ளது. செப் 14 ஆம் தேதி இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை துவங்க உள்ளது. 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
 
அத்னை தொடர்ந்து இப்போது, இளஞர் வந்த தங்களது கட்சிக்கு சேர அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு... 
திமுக துவங்கப்பட்ட போது அண்ணாவுக்கு வயது 40, கலைஞருக்கு வயது 25, பேராசிரியர் அன்பழகனுக்கு வயது 26. இளைஞர்களால் கட்டி காப்பற்றப்பட்ட தமிழகம் இன்று ஆபத்தான சூழலில் உள்ளது.
 
நமது மொழி, இனம், கலாச்சாரத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் அரணாக இருந்து காத்து வருவது திமுக. திமுகவின் அனைத்து போராட்டத்திற்கும் உறுதுணையாக் இருந்தது இளைஞர்கள். 
ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து தமிழகத்தை காக்க திமுக இளைஞரணியில் இளைஞர்கள் பெருந்திரளாக வந்து இணைய வேண்டும். அரசுகளின் அவலட்சணங்களை எடுத்துக்கூற தூதுவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும்.

நாளை (செப்.14) துவங்கி நவ.14 ஆம் தேதி வரை, இரண்டு மாத காலத்திற்கு திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இளைஞர்கள் வந்து இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.