உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களை ஒழிக்க வேண்டும் – சீமான்
விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் இன்று தேர்தல் பரப்புரை செய்த சீமான் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு தேர்தலில் ஆளை மாற்றி ஆட்சியை மாற்றுவதற்கு பயனில்லை; முதலில் அடிப்படை அமைப்பை மாற்ற வேண்டும். அதற்காக இரட்டை இலை உதயசூரியன் ஆகிய சின்னங்களை ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.