சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!
சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க U திருப்பம் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணாசாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அண்ணாசாலை x ஜி.பி. சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜி.பி. சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கிவரும் வாகனங்கள் அண்ணாசாலை X ஜி.பி. சாலை சந்திப்பில் கடந்து செல்வதால் அண்ணாசாலையில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் அச்சமயம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை தவிர்கும் பொருட்டு அண்ணாசாலை X ஜி.பி. சாலை சந்திப்பில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
(1) ஜி.பி. சாலையில் இருந்து அண்ணாசாலை X ஜி.பி. சாலை
அண்ணாசாலை நோக்கிவரும் சந்திப்பில் அனுமதிக்கப்படாமல்
வாகனங்கள் இடது புறம் திருப்பிவிடப்பட்டு எல்.ஐ.சி. எதிரில் 'U' திருப்பம் அனுமதிக்கப்பட்டு டேம்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
(2) அண்ணாசாலை X வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஜி.பி. சாலையில் இடதுப்புறம் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்குண்டு வழியாக செல்லலாம்.
(3) அண்ணா மேம்பாலத்திலிருந்து ஜி.பி. சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள், ஜி.பி. சாலையை அடைய மவுண்ட் ரோடு தர்கா (புகாரி ஹோட்டல் அருகில்) U' திருப்பத்தில் அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தினால் போக்குவரத்து குறைந்து வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல அண்ணாசாலையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
Edited by Mahendran