வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:01 IST)

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. 2 பேருக்கு சிறை, 7 பேர் விடுதலை..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட 9 பேர்களில் ஏழு பேர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

படகு ஓட்டுனர் ராபர்ட் என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஹரி கிருஷ்ணன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran