1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (10:50 IST)

துணிவு நடிகர் பெயரில் ஃபேக் ஐடி; இளம்பெண்களிடம் மோசடி!

பேஸ்புக்கில் பிரபல துணிவு நடிகர் பெயரில் போலி கணக்கு தொடங்கி இளம்பெண்களை ஏமாற்றிய நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக சமூக வலைதளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பிரபல நபர்கள் பெயரில் போலி கணக்குகளை தொடங்கி பலரிடம் பணமோசடி செய்யும் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.

துணிவு, கனா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தர்ஷன். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய இளம்பெண்களும் இவருக்கு ரசிகைகள் ஆனார்கள். இந்நிலையில் பேஸ்புக்கில் தர்ஷன் பெயரில் போலி கணக்கு தொடங்கிய மர்ம ஆசாமிகள் இருவர் அதன் மூலம் பல பெண்களிடம் நட்பாக பேசி அவர்களது புகைப்படங்களை வாங்கியுள்ளனர்.


பின்னர் அந்த புகைப்படங்களை மார்பிங் செய்து அவற்றை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் இதுபோல மிரட்டி ரூ.2 லட்சம் பறித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன், வாகித் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

இதுபோல அவர்கள் பல பெண்களை மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர்களது செல்போனை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.