2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து ரயிலில் பயணம் செய்ய ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒன்று சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அதுகுறித்து சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இதனால் பலர் ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ரயில்களில் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிகள் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.